சென்னை புது வண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகர், அம்மனியம்மன் தோட்டம் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் மகன் தினேஷ் (25) கூலி வேலை செய்துவந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருப்பதாகவும் தெரிகிறது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) மாலை அதே பகுதியில் வந்த அடையாளம் தெரியாதநபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தினேஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஒடியுள்ளனர். இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் கலைச்செல்வன் தலைமையிலான காவல் துறையினர், தினேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக, புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.