தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாய்தாவுக்கு வந்த ரவுடி கொலை - வில்லிவாக்கம்

சென்னை: வில்லிவாக்கத்தில் வாய்தாவுக்கு வந்த ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

By

Published : Aug 1, 2021, 12:04 PM IST

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (28). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வெளியே வந்த இவர் பெங்களூரில் வேலை செய்தார்.

இந்நிலையில் கொலை வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் கடந்த 30ஆம் தேதி வழக்கு விசாரணை இருந்ததால் கடந்த 28ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை வந்துள்ளார். நேற்று நள்ளிரவு செல்ஃபோனில் பேசிக்கொண்டே வெளியே வந்து அலெக்சை மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி இழுத்துச் சென்றனர்.

இதுகுறித்து அலெஸ் தாயார் வில்லிவாக்கம் காவல் துறையில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நியூ ஆவடி ரோடு, ரயில்வே மியூசியம் அருகில் அலெக்ஸ் தலை சிதைக்கப்பட்டு இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அலெக்ஸின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக காவல் துறையினர் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த ஆண்டு நடந்த கருணாகரன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வில்லிவாக்கத்தை சேர்ந்த சரவணன், ரஞ்சித் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details