தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரவும் பட்டாக்கத்தியில் கேக் வெட்டும் கலாசாரம் - மாணவருக்கு போலீஸ் வலை!

சென்னை: மதுரவாயல் பகுதி நடுரோட்டில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர்
பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர்

By

Published : Jan 18, 2020, 6:10 PM IST

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கமல் (26). இவர் திருப்பதியிலுள்ள சட்டக் கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 11ஆம் தேதி, இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அன்று இரவு நடுரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். மேலும், அவரது நண்பர்கள் அவருக்கு பண மாலை அணிவித்து, மலர் கிரீடம் வைத்து கொண்டாடினர்.

பின்னர், இரண்டு அடி நீளமுள்ள பட்டாக்கத்தியால் கேக்கை வெட்டியதை அவரது நண்பர்கள் செல்ஃபோனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தற்போது அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதைனையறிந்த காவல் துறையினர் பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர் கமலையும் அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 100க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் பிரபல ரவுடி பினு, தன் பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடினார். அன்று முதல் ரவுடிகளிடையே பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் கலாசாரம் பரவி வருகிறது.

மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொது இடங்களில் பட்டாக்கத்தியால், கேக் வெட்டி கொண்டாடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர்

கடந்த ஆண்டு சென்னை எம்ஜிஆர் நகரில் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் சிலரை காவல் துறையினர் கைது செய்ததும், அயனாவரத்தில் கேக் வெட்டி கொண்டாடிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவனை சரமாரியாக வெட்டிய கஞ்சா கும்பல்

ABOUT THE AUTHOR

...view details