தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது - சென்னை ரவுடி கைது செய்தி

சென்னையில் தலைமறைவாக இருந்த ரவுடியை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது
சென்னையில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

By

Published : Dec 16, 2021, 10:07 PM IST

சென்னை: கண்ணகி நகரை சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி (32). கிச்சா மீது துரைப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

காவல் துறையினருக்கு துப்பு கொடுத்ததாக சந்தியா என்ற பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் கிச்சா தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவரது மனைவி பிரியாவுடன் சேகர் என்ற நாய்சேகர் தகாத உறவில் இருந்துள்ளார்.

இதனால் மனைவி, நாய் சேகர் ஆகியோரை கொலை செய்ய கிச்சா திட்டமிட்டார்.

கிச்சா செயலி ஒன்றை பயன்படுத்தி தலைமறைவாக இருந்துள்ளார். அதாவது அந்த செயலியை பயன்படுத்துவது மூலம் வெளிநாடுகளில் இருப்பது போல் காட்டும்.

இருப்பினும் கிச்சா செல்போன் ஐஎம்இஐ நம்பர் மூலம் அவர் இருக்கும் இடத்தை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

உடனே தனிப்படையினர் பெருங்குடியில் ஒரு வீட்டில் இருந்த கிச்சா, அவரது கூட்டாளிகளான ஜெகன் (22), பார்த்திபன் (22), சந்தோஷ் (18), ராஜராஜன் (26) ஆகியோரை கைது செய்தனர்.

மனைவி மற்றும் நாய் சேகரை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டுகளை சிச்சா தயாரித்து வந்துள்ளார்.

அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 2 இருசக்கர வாகனங்கள், 8 செல்போன்கள், 5 வீச்சரிவாள்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தெற்கு கூடுதல் ஆணையர் கண்ணன், தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திர நாயர் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:ஆசை வார்த்தை கூறி சிறுவர்களிடம் ரூ.8 லட்சம் மோசடி: பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details