தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்களை கண்டு தப்பியோடிய ரவுடிகள் - போலீஸ் விசாரணை - காவலர்களை கண்டு தப்பிய ரவுடிகள்

சென்னையில் வாகன சோதனையின்போது காரில் இருந்து தப்பி ஓடிய நெல்லை மாவட்ட ரவுடிகளில் 2 பேர், கார் ஓட்டுனர் ஆகியோரை நுங்கம்பாக்கம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காவலர்களை கண்டு தப்பியோடிய ரவுடிகள்
காவலர்களை கண்டு தப்பியோடிய ரவுடிகள்

By

Published : Mar 14, 2022, 9:59 AM IST

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மருது தலைமையிலான காவல் துறையினர் மார்ச் 12ஆம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நுங்கம்பாக்கம் மேயர் சிவசண்முகம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரை மடக்குவதை தெரிந்து காரில் இருந்த 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

உடனே காவல் துறையினர், கார் ஓட்டுநரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் செல்வமணி என்பது தெரியவந்தது. பின்னர், காரை சோதனை செய்தபோது 2 அரிவாள்கள் இருந்தது. அதனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். செல்வமணி மீது தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட அரிவாள்கள்

கார் ஓட்டுநர் செல்வமணியை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து மேற்கொண்டு நடத்திய விசாரணையில் தப்பி ஓடியது நெல்லை மாவட்டம் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த கணேசன், நெல்லை குலவணிகர்புரத்தைச் சேர்ந்த உதய பாண்டி, நெல்லை மகிழ்ச்சி நகரைச் சேர்ந்த பரமசிவம், நெல்லை மாவட்டம் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த முருகன், ராயபுரத்தைச் சேர்ந்த விஜய் சந்திரசேகர், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஏ.எம்.கணேசன், ரஞ்சித் ஆகியோர் தப்பி ஓடி விட்டது தெரியவந்தது.

இதில் தப்பி ஓடிய நெல்லை கணேசன் மீது நாங்குநேரி காவல் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கும் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் கணேசன் தங்கியிருந்த நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜிற்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் தங்க வேண்டும் என்றும் இந்த அறையை வழக்கறிஞர் விஜய் சந்திரசேகர் என்பவரும், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கணேசனும் தயார் செய்து கொடுத்ததாக கைதான கார் ஓட்டுநர் செல்வமணி போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்

இதையடுத்து தப்பி ஓடிய நுங்கம்பாக்கத்தைச்சேர்ந்த ஏ.எம்.கணேசனை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரிடமிருந்து 2 அரிவாள்கள், கார், பைக், செல்ஃபோன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும், கஞ்சா பொட்டலங்களும், ஆயிரக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை விசாரணைக்கு பிறகு தெரிவிப்பதாக நுங்கம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடிய நெல்லை மாவட்ட ரவுடிகள் சென்னையில் யாரேனும் கொலை செய்வதற்கு வந்துள்ளார்கள் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். அந்த கோணத்தில் நுங்கம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:அசதியில் தூங்கிய தொழிலாளர்களிடம் பணம், செல்போன் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details