தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் கேட்ட ரவுடிகள் கைது - மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை பட்டாசு கடையில் கத்தியைக்காட்டி மிரட்டி பட்டாசு பாக்ஸ் மற்றும் மாமூல் கேட்டு மிரட்டிய 3 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Etv Bharatபட்டாசு கடையில் கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்ட ரவுடிகள் கைது
Etv Bharatபட்டாசு கடையில் கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்ட ரவுடிகள் கைது

By

Published : Oct 24, 2022, 3:27 PM IST

சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ மார்க்கெட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு கடைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று(அக்-23) மாலை இந்தப் பகுதிக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பட்டாசு கடையில், கத்தியைக் காட்டி மிரட்டி, உரிமையாளர்களிடம் பட்டாசு பாக்ஸ் மற்றும் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர்.

குறிப்பாக பொதுமக்கள் முன்னிலையிலேயே அந்தக் கும்பல் கடையின் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபட்டதால் அச்சமடைந்தனர். இதேபோல பல பட்டாசு கடைகளில் இந்தக் கும்பல் மிரட்டி, மாமூல் வசூலில் ஈடுபட்ட போது, இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்று மாமூல் வசூலில் ஈடுபட்ட மூன்று ரவுடிகளைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச்சேர்ந்த பிரகாஷ்(20), நீலேஷ் குமார்(25) மற்றும் வினோத் ராஜா என்ற சென்ட்ரல் ராஜா என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது ஏற்கெனவே பல காவல் நிலையங்களில் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் அமைந்தகரை பகுதிகளில் உள்ள கடைகளில் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

பட்டாசு கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் கேட்ட ரவுடிகள் கைது

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ரவுடிகள் பொதுமக்கள் முன்னிலையிலேயே கத்தியைக் காட்டி மிரட்டி, மாமூல் வசூலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க:கோவை கார் விபத்து... அடுத்தடுத்து வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...

ABOUT THE AUTHOR

...view details