தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டா கத்தியை காட்டி மதுபானம் கொள்ளையடித்த கும்பல்: விரட்டிப் பிடித்த போலீசார்! - அரசு மதுபானக்கடை

அரசு மதுபானக் கடை பாரில் பட்டா கத்தியைக் காட்டி மதுபானங்களை திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் விரட்டிப்பிடித்தனர்.

கொள்ளை கும்பலை விரட்டிப் பிடித்த போலீசார்
கொள்ளை கும்பலை விரட்டிப் பிடித்த போலீசார்

By

Published : Jun 22, 2021, 6:17 PM IST

சென்னை: பூந்தமல்லி அடுத்த குமனன்சாவடி பகுதியில் ஒரே இடத்தில் 5 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. ஊரடங்கு அமலில் இருப்பதால், மதுபான கடைகள் மாலை 5 வரை மட்டும் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்கள் செயல்பட அனுமதி இல்லை.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 21) இரவு குமனன்சாவடி பகுதியில் உள்ள பார்களில் கள்ளச்சந்தையில் சிலர் மதுபானங்களை விற்று வந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கும்பல், பட்டா கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த கும்பல், அங்கிருந்த ஒரு பெட்டி மதுபாட்டில்கள் மற்றும் மது விற்றுக் கொண்டிருந்தவர்களின் செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பூந்தமல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தப்பிச்சென்ற கும்பலை கரையான்சாவடியில் போலீசார் மடக்கினர். ஆனால் போலீசாரை தள்ளிவிடடு அக்கும்பல் தப்பி ஓட முயற்சித்தது. இதனையடுத்து காவல்துறையினரும் அவர்களை விரட்டிச் சென்றனர். அங்குள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்தைத் தொடர்ந்து காவலர்களும் வீட்டுக்குள் சென்றனர். அங்கு, மதுபாட்டில்கள், பட்டா கத்திகள் இருந்தன. அதனால் வீட்டின் கதவை வெளியே சாத்தி விட்டு, கூடுதல் காவலர்களை வரவழைத்தனர்.

காவலர்கள் வந்ததும், வீட்டிற்குள் இருந்த குமணன்சாவடியைச் சேர்ந்த முபாரக், ரபிக் ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தற்போது, பூந்தமல்லி பகுதியில் கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:எஸ்பிஐ ஏடிஎம்-ல் நூதன திருட்டு நடந்தது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details