தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கோயில் அறங்காவலர்கள் தங்களது வாகனங்களில் பெயர் பலகை பொருத்தக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்! - chennai news in tamil

அறங்காவலர்கள் தங்கள் வாகனங்களில் பெயர் பலகைகளை பொருத்தக் கூடாது என சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

road-laying-without-permission-bailable-arrest-warrant-to-commissioner-mhc
விசாரணைக்கு ஆஜராகாத சுற்றுச்சூழல் ஆணைய அதிகாரிக்கு பிடிவாரண்ட்- உயர்நீதிமன்றம் உத்தரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 1:43 PM IST

சென்னை:சிங்கவரம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கு சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரிக்கு, எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடி வாரண்டை பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் மலை மீது உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளது, இந்த கோயிலுக்கு சென்று வர 120 படிக்கட்டுகள் உள்ளன. இதன் வழியாக தான் பக்தர்கள் ஏறி செல்ல வேண்டும். வயதானவர்கள் குழந்தைகள் என பலரும் இதன் வழியாக ஏறி செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதனையடுத்து தற்போது சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சாலை அமைப்பதாக கூறி, உள்ளூர் எம்.எல்.ஏ. ஆதரவுடன், பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதாக கூறி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் கோயில் பகுதிகளில் குவாரி பணிகளை மேற்கொள்ளவும், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை வைத்து உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, வெடி பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சாலை அமைப்பது தொடர்பாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தனர்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக ஐ.ஐ.டி. அறிக்கை கோரி உள்ளதாகவும், அறிக்கை கிடைத்த பின் ஒன்பது மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஐ.ஐ.டி.யின் அறிக்கையை நவம்பர் 17ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆஜராகாத மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரிக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்தனர்.

அதேபோல், அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறங்காவலர்கள் தங்கள் வாகனங்களில் பெயர் பலகைகளை பொருத்தக் கூடாது என சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:செய்யாத தவறுக்காக எந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டோம்: வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உறுதி

ABOUT THE AUTHOR

...view details