ராயபுரம், சூரியநாராயணன் சாலையில் காவல் நிலையத்திற்கு அருகே சாலையின் நடுவே திடீரென 10 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லுகின்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னையில் சாலை நடுவே திடீர் பள்ளம் ! - ராயபுரம்
சென்னை: ராயபுரத்தில் உள்ள சூரிய நாராயணன் சாலையின் நடுவே திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சென்னையில் சாலை நடுவே திடீர் பள்ளம்
இந்த பள்ளத்தில் யாருக்கும் எந்த விபத்து ஏற்படவில்லை. ஆனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வருகின்றனர்.
சாலை நடுவே இருந்த பள்ளத்தின் காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.