தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்திக்கு தடை - விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சாலை மறியல் - etv bharat

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சாலை மறியல்
களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சாலை மறியல்

By

Published : Aug 31, 2021, 3:29 PM IST

சென்னை: கரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் விநாயகர் சிலை ஊர்வலம் ஆகியவற்றிற்கு அரசு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விநாயகர் சிலை மற்றும் களிமண் பொம்மை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

சாலை மறியல்

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடன்கள் தள்ளுபடி

அப்போது அவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வங்கியில் பெறப்பட்டுள்ள கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:படிக்காமல் ஏன் forward செய்தீர்கள்? - எஸ்.வி.சேகரிடம் நீதிபதி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details