செங்குன்றம் அடுத்த நல்லூர் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ஜெயசீலன் (13). இவர் இன்று காலை பழைய இருப்புப் பொருட்களை எடுத்துக்கொண்டு செங்குன்றம் வழியாக இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த டேங்கர் லாரியை சிறுவன் முந்த முயன்றபோது நிலைதடுமாறி டயருக்கடியில் சிக்கினான்.
டேங்கர் லாரியை முந்த முயன்றபோது சிறுவனுக்கு நேர்ந்த கதி! - road-accident in sengundram
சென்னை: செங்குன்றம் அடுத்த வடகரை நான்குமுனை சாலையில், டேங்கர் லாரியை முந்த முயன்றபோது டயருக்கடியில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் சிறுவன் ஜெயசீலன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் புலனாய்வு காவல் துறையினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், டேங்கர் லாரி ஓட்டுநர் முருகானந்தத்தைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற விபத்துகள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெறுவதால், விபத்தைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 13 வயது சிறுவன் விபத்தில் பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.