சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தான்குளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக பழமை வாய்ந்த ஏரி உள்ளது. இந்த ஏரி சரியான பராமரிப்பின்றி மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்க முடியாமல் போயுள்ளது. எனவே, சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள பல சங்கங்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஏரியை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரினர். அரசு மற்றும் அரசியல்வாதிகளின் உதவி இல்லாமல் பொதுமக்களே இணைந்து ஏரியை தூர்வாரிய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
பழம்பெரும் ஏரியை தூர் வாரிய பொதுமக்கள்! - ஊர் கிராம மக்கள்
சென்னை: கேளம்பாக்கத்தில் சாத்தான் குப்பம் என்ற கிராமத்தில் மிகவும் பழமையான ஏரியை பொதுமக்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் இணைந்து தூர்வாரியது பாராட்டைப் பெற்றுள்ளது.
clean the river
மேலும், இதுகுறித்து கூறிய சாத்தான்குளம் கிராம மக்கள், ”இனி வரும் காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க முடியும். இதனால் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தலாம் என்றனர்.