தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில் போட்டி: ஒருவர் வெட்டிக் கொலை! - Kasimedu murder

சென்னை: ஆர்.கே.நகரில் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளரை கொலை செய்ய முயற்சித்த நபரை பழிவாங்கும் வகையில், அவரை கடத்திச் சென்று காசிமேடு துறைமுகம் அருகே கடலில் வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது

By

Published : Aug 7, 2019, 8:13 PM IST

சென்னை காசிமேடு சூரியன் நாராயணன் சாலையில் குட்டி பிரகாஷ், சேகர் ஆகியோர், தனித்தனியே சவுண்ட் சர்வீஸ் வைத்து தொழில் செய்துவருகின்றனர். இவர்களுக்கிடையே தொழில் போட்டி காரணமாக சில நாட்களாகவே பிரச்னை இருந்துள்ளது.

இதில், பிரகாஷை கொலை செய்ய முயன்றதாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து, சேகர் தரப்பைச் சேர்ந்த மூன்று பேரை புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொழில் போட்டி காரணமாக ஒருவர் வெட்டி கொலை

இந்நிலையில், பிரகாஷை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட சேகரின் உறவினரும், மூன்று பேரில் ஒருவருமான பெருமாளை கடத்தி பிரகாஷூ அவரின் நான்கு நண்பர்களும் சேர்ந்து வெட்டி காசிமேடு கடலில் தள்ளியுள்ளனர்.

வெட்டுக்காயத்துடன் நீந்திக் கரைச் சேர்ந்த பெருமாள், காவலாளி ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து மீட்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், பொக்கை கார்த்திக் என்பவரை காவல் துறை கைது செய்தனர். மேலும், 2 பேரை காவல்துறைத் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details