மதுரவாயல் அருகே, ஆலப்பாக்கம் பகுதியில் பிரியாணிக் கடை நடத்தி வருபவர் ஷகாபுதின் (46). இவர் வழக்கம்போல் நேற்று (ஏப்.09) இரவு கடையில் பிரியாணி விற்று முடித்துவிட்டு மெட்ரோ நகர் 3ஆவது தெரு வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பைக்கில் அவ்வழியே சென்ற மூன்று பேர் அவரை முகத்தில் தாக்கி விட்டு அவரிடம் இருந்த செல்போன், பிரியாணி விற்ற இரண்டாயிரம் ரூபாய் பணம், 3.5 கிராம் தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் ஷகாபுதீன் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்த மதுரவாயல் காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்ட நபர்கள், ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (25), ஹரிபிரசாத் (19), சதீஸ்குமார் (19) ஆகிய மூன்று பேர் எனத் தெரியவந்தது.