தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் சேர கடும் போட்டி: குலுக்கல் முறையில் தேர்வு...! - right to education policy Private school admission

சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு கடும் போட்டி நிலவியதையடுத்து, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை பள்ளிகளில் சேர்வதற்கு கடும்போட்டி
சென்னை பள்ளிகளில் சேர்வதற்கு கடும்போட்டி

By

Published : Oct 1, 2020, 12:15 PM IST

Updated : Oct 1, 2020, 6:00 PM IST

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்புகளில் எல்கேஜி அல்லது முதலாம் வகுப்பில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீத இடங்கள் ஏழை-எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள எட்டாயிரத்து 628 தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15ஆயிரத்து 771 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக மாணவர்கள் பெற்றோர்கள் இணையதளம் மூலம் 83 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு குறைவான விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்து மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

மொத்த இடங்களைவிட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பள்ளிகளில் இன்று (அக். 1) காலை 10 மணிக்கு குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள 462 தனியார் பள்ளிகளில் 5,548 மாணவர்கள் சேர்க்க வேண்டும். ஆனால் 6,634 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவற்றில் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். குலுக்கல் முறை பெற்றோர்களின் முன்னிலையில்தான் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் சேர கடும் போட்டி

இதுகுறித்து பெற்றோர் இந்திராணி கூறுகையில், “வாட்ஸ் அப்பில் வந்த தகவலை பார்த்து எனது குழந்தையை சேர்ப்பதற்கு இந்த பள்ளிக்கு விண்ணப்பித்தேன். தற்போது தஎனது குழந்தைக்கு இடம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்துவது வரவேற்கக்கூடியது” என்றார்.

இதையும் படிங்க...உங்க நண்பருக்கு எப்போ வரவேற்பு: மோடியை விமர்சித்த ப.சிதம்பரம்

Last Updated : Oct 1, 2020, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details