அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீது ரூ. 280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே சூரப்பா மீதான விசாரணை என்பது விழுக்காடு நிறைவு பெற்று விட்டது, மேலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
’ஒரு வாரத்திற்குள் பதிலளிங்க...’; முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு நோட்டீஸ்!
சென்னை : ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட புகார்கள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சூரப்பா, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் குற்ற நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. சூரப்பாவின் விளக்கத்தை பொறுத்து அரசிடம் அறிக்கை தாகல் செய்யப்படும் என ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இம்மாத இறுதியில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு- தமிழ்நாடு அரசு உத்தரவு!