சென்னை புறநகர் பகுதிகளில் காலையில் பெய்த மழையால் தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் முதல் தெருவில் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இப்பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தன.
பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், இந்தப் பள்ளங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் பள்ளம் இருக்கும் இடம்தெரியாமல் பொதுமக்கள் தடுக்கி, தடுமாறி விழுந்தனர். மேலும் வாகனங்களில் பயணித்தவர்களும் ஆபத்தான மழைநீர் மூடிய பள்ளங்களைக் கடந்து சென்றனர்.