சென்னை :உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கை, திருநம்பி ஆகிய மூன்றாம் பாலினத்தவர்களுக்கென தனிப் பிரிவு ஒன்றை உருவாக்கி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அமைந்தகரையைச் சேர்ந்த கிரேஸ் பானு என்ற திருநங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக்.05) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்குவதாகத் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.