தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழர்களை மீட்க வேண்டும்-பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்....! - லண்டன்

சென்னை: ஸ்காட்லாந்தில் சிக்கிக்கொண்டிருக்கும் தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்களை மீட்க வேண்டும்-பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
தமிழர்களை மீட்க வேண்டும்-பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

By

Published : Jun 3, 2020, 3:46 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐரோப்பாவின் ஸ்காட்லாந்து நாட்டில் சொகுசுக் கப்பலில் பணியாற்றி வந்த தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 48 இந்தியர்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். தங்களை தாயகத்திற்கு அழைத்துச் செல்லும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

கப்பலில் சிக்கித் தவிக்கும் அவர்கள் மாநில அரசுகள் மூலமாக தாயகம் திரும்புவதற்கு விண்ணப்பித்தும், தங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு மற்றம் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். எனினும், இந்திய அரசிடம் இருந்தோ, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில அரசுகளிடமிருந்தோ இதுவரை எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இங்கிலாந்து நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தங்களுக்கும் கரோனா வைரஸ் நோய் தொற்றிக் கொள்ளுமோ என்று அஞ்சுகின்றனர். அவர்களின் அச்சத்தில் நியாயம் இருக்கிறது.உலகின் எந்த நாடுகளில் இந்தியர்கள் சிக்கித் தவித்தாலும் அவர்களை மீட்டு வர வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.

கப்பலில் தவிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி, இன்னும் நூற்றுக்கணக்கன பேர் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் முடங்கியுள்ளனர், அங்கு இருந்து ஒரே ஒரு விமானத்தை இயக்கினாலே அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர முடியும்.எனவே, "வந்தே பாரத்" இயக்கத்தின் மூலம் லண்டனுக்கு சிறப்பு விமானத்தை இயக்கியும், ஸ்காட்லாந்தில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிய கணவர் கைது

ABOUT THE AUTHOR

...view details