தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல்செய்த நிறுவனம்: அரசிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை - மணல் அள்ளும் இயந்திரம் பறிமுதல்

சென்னை: மாதத் தவணையை கட்டவில்லை என மணல் அள்ளும் இயந்திரத்தைப் பறிமுதல்செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர் சங்கத்தினர் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கைவைத்துள்ளனர்.

மாதத்தவனையை கட்டவில்லை என மணல் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர் சங்கத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை
மாதத்தவனையை கட்டவில்லை என மணல் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர் சங்கத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை

By

Published : Sep 8, 2020, 12:21 PM IST

கரோனா காலகட்டத்தில் மாதத்தவணையை கட்டவில்லை என மணல் அள்ளும் இயந்திரத்தைப் பறிமுதல்செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர் சங்கத்தினர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் குணசேகரன், கரோனா காலக்கட்டத்தில் மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் வாழ்வாதரத்தை இழந்துதவிப்பதாகத் தெரிவித்தார்.

இச்சூழலில் மாதத்தவணையை கட்டுவதிலிருந்து விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தனியார் நிதி நிறுவனம் அரசின் உத்தரவை மீறி மணல் அள்ளும் இயந்திரத்தைப் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறினார்.

இச்செயலில் ஈடுபட்ட நிறுவனம் மீது நடவடிக்க எடுக்க கோரியும், பறிமுதல்செய்யப்பட்ட வாகனத்தை மீட்டுத்தர வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details