சென்னையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், அன்பரசு ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்கையில், 'மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களுக்கு எங்களது அமைப்பு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் தேர்தலில் ஜனநாயகக் கடமையை முழுமையாக ஆற்றிய அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட எட்டாயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளினால் அவர்கள் பணப்பயன், பதவி உயர்வு, பணிமாறுதல் போன்ற சலுகைகள் பெறுவதில் சிக்கல் உள்ளது.