சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அவை பின்வருமாறு:
- சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
- குடும்பப் பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்
- சமையல் அமைப்பாளருக்கு 5 லட்சம் ரூபாயும், சமையல் உதவியாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் ஓய்வு பெறும்போது வழங்க வேண்டும்
- சத்துணவு திட்டத்தில் காலியாகவுள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்
- காலி பணியிடம் நிரப்புவதற்கு முன்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக இடமாறுதல் கேட்கும் சத்துணவு ஊழியர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்க வேண்டும்
- சமையல் உதவியாளருக்கு சமையலர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்
- சத்துணவு திட்டத்தில் பயன் பெறும் மாணவர்களுக்கு நேரடியாக உணவு சமைத்து வழங்க வேண்டும்