தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சட்டப்படியும், கிராம சபைக் கூட்ட விதிகளின்படியும் ஜனவரி 26 - குடியரசு தினம், மே 1 - உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 4 முறை, கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா தொற்றைக் காரணம் காட்டி, அக்டோபர் 2ஆம் தேதி நடக்க இருந்த கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
அதேபோன்று இந்தாண்டும் நாளை (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்தைக் கூட்ட, கரோனா பரவல் காரணத்தை சுட்டிக்காட்டி, கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.