சென்னை:வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் யை நீக்குவது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் மற்றும் ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் நத்தம் விஸ்வநாதன் பேசும் போது ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்பட்டது.
சூழ்நிலையை சமாளிக்க உடனடியாக கே.பி.முனுசாமி எழுந்து பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நிச்சயம் பொதுச்செயலாளரால் ஓபிஎஸ்சை நீக்கும் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறினார்.