தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்ரா கொலை வழக்கு: ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என்று அவரது நண்பர் மனு!

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, அவரது 10 ஆண்டு கால நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

chennai highcourt
chennai highcourt

By

Published : Jan 18, 2021, 9:49 PM IST

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, ஹேம்நாத்தின் 10 ஆண்டு கால நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சையது ரோஹித் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், "ஹேம்நாத் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்தார். இதுதொடர்பாக பலமுறை எச்சரித்தும் கேட்காததால், அவரிடம் இருந்து விலகியிருந்தேன். தன்னை பெரிய தொழிலதிபர் போல், அரசியல்வாதிகள், அலுவலர்களுடன் நெருக்கமானவர் போல் காட்டிக் கொண்டு பல பெண்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார். அதேபோல்தான் சித்ராவுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஹேம்நாத் துன்புறுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சக நடிகருடன் நடனமாடியது குறித்து இருவருக்கும் இடையில் சண்டை நீடித்து வந்தது.

சித்ரா-ஹேம்நாத் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிந்த என்னை, இதுவரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைக்கவில்லை" என்று மனுவில் கூறியுள்ளார்.

ஹேம்நாத்தின் ஜாமீன் மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய காவல் துறையினர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details