தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகக் கோப்பை கால்பந்து போட்டி - சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை - கால்பந்து போட்டி

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 19, 2022, 6:54 PM IST

சென்னை: சர்வதேச கால்பந்து சம்மேளனம், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கத்தார் நாட்டில் நடத்துகிறது. இந்த போட்டிகள் நாளை (நவ. 20) முதல் தொடங்கவுள்ளன. இந்த போட்டிகளை வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஒளிபரப்புவதற்கான உரிமையை VIACOM -18 மீடியா நிறுவனம் பெற்றுள்ளது.

பெருந்தொகையை முதலீடு செய்து உரிமம் பெற்றுள்ள நிலையில், சட்டவிரோதமாக இந்த போட்டிகளைப் பதிவு செய்யவும், மறு ஒளிபரப்பு செய்யவும் இணையதளங்களுக்குத் தடைவிதிக்க வேண்டுமென VIACOM 18 நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில், 12ஆயிரத்து 37 இணையதள நிறுவனங்கள் தங்களின் காப்புரிமையை மீறும் வகையில் செயல்படுமென அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை பதிவு செய்யவும், ஒளிபரப்பவும், பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யவும், இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Video: விராட் கோலி குடும்பத்துடன் சுற்றுலாப் பயணம்!

ABOUT THE AUTHOR

...view details