தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் 9 முதல் 12ஆம் வகுப்புவரை மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.