இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24ஆம் தேதி வரை நடைபெற்றன. அதில் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற தேர்வினை ஊரடங்கு காரணமாக பல மாணவர்கள் எழுதாமல் தவறவிட்டனர். அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும்.
ஊரடங்கால் தேர்வினைத் தவறவிட்ட 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பு
சென்னை: மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி 12ஆம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வினை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். அதனால் மார்ச் 24ஆம் தேதி தேர்வினை தவறவிட்ட மாணவர்கள், மறு தேர்வு எழுத விரும்பினால் அதன் விருப்பக் கடிதத்தை வரும் 24ஆம் தேதிக்குள் பெற்று ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 24ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்வினை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா அச்சத்தில் தேர்வுத்துறை ஊழியர்கள் - தேர்வு முடிவுகள் என்னவாகும்?