கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
ஏப்ரலில் ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்: அரசு அறிவிப்பு - ration fund will be given from april
சென்னை: கரோனா பாதிப்பு நிவாரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த ஆயிரம் ரூபாய் பணம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருள்களை நியாயவிலை கடைகளில் டோக்கன் முறையில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “ஆயிரம் ரூபாய் ரொக்கம், விலையின்றி வழங்கப்பட உள்ள அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்தப் பணியை மேற்கொள்ளும் அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களுக்கும் நாளொன்றுக்கு 200 ரூபாய் பயணம் மற்றும் இடைநிகல் செலவினமாக அளிக்க வேண்டும். மேலும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் மாஸ்க் கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை கொள்முதல் செய்து தர வேண்டும். இவற்றை கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.