தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எல்லா அனிமலுக்கும் நான்தான் ஜூ கீப்பர்" - ராஷ்மிகா மந்தனா! - ராஷ்மிகா மந்தனா

ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாக உள்ள அனிமல் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற அனிமல் பட புரோமஷன்
சென்னையில் நடைபெற்ற அனிமல் பட புரோமஷன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 7:51 PM IST

சென்னை:அர்ஜூன் ரெட்டி படத்திற்குப் பின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'அனிமல்'. இப்படத்தை டி சீரியல் மற்றும் சினீ 1 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், அனில் கபூர், பாபி தியோல், பிரனீதி சோப்ரா போன்ற முக்கிய நட்சித்திரங்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். பாலிவுட்டில் சாக்லேட் பாயாக வலம் வந்த ரன்பீர் கபூர் இந்த படத்திற்காக ரஹக்ட்(rugged) தோற்றத்தில் நடித்துள்ளது அவரது ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படம் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதனையொட்டி இந்தப்பட புரோமஷனின் ஒரு நிகழ்வாக செய்தியாளர் சந்திப்பு இன்று (நவ. 26) சென்னையில் நடைபெற்றது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியதாவது, "பெரிய நடிகர்களின் படங்களில் நான் இருப்பதற்கு எந்தவித ரகசியமும் இல்லை. ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த படத்தின் கதையை கேட்பேன். இயக்குனரை நம்புவேன், மற்றபடி என் கையில் எதுவுமில்லை. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால், எல்லா அனிமலுக்கும் நான்தான் ஜூ கீப்பர்" என்று நகைச்சுவையாக பேசினார்.

தென்னிந்திய நடிகர்கள் அல்லது வடஇந்திய நடிகர்கள் யாருடன் நடிக்கும்போது உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "எனக்கு கதைதான் ரொம்ப முக்கியம். அதைக் கடந்து இயக்குநரின் பார்வை என்ன என்பது முக்கியம். நான் கூர்க்கில் இருந்து வந்த பெண்.

நான் நடிகை ஆவேன் என்று கூட நினைக்கவில்லை. எனக்கு இதுபோன்ற பெரிய நடிகர்கள் உடன் நடிப்பது பெருமையான விஷயம். தற்போது மிகப் பெரிய நபர்களுடன் மேடையில் அமர்ந்துள்ளேன். இதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளுக்கும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கல்யாணத்திற்கு அப்புறம் 3 ஹீரோயினுடன் படம்.. கீர்த்தி எதுவும் சொல்ல மாட்டாங்க - அசோக் செல்வன் கலகலப்பு!

ABOUT THE AUTHOR

...view details