தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து யோசிக்கலாம்' - ராமதாஸ் - Ramdoss on Rajinikanth party

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பின் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று பாஜக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Ramdoss on Rajinikanth party
Ramdoss on Rajinikanth party

By

Published : Feb 11, 2020, 12:34 PM IST

சென்னை பாமக கட்சி அலுவலகத்தில் பாமக சார்பாக தயார் செய்யப்பட்ட வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். வழக்கம்போல பாமகவின் நிதிநிலை அறிக்கையை அங்கிருந்த பெண் செய்தியாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், செம்மரம் போல் பனை மரம் வெட்டுவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார். பாஜக நெய்வேலியில் போராட்டம் நடத்தியது குறித்து ராமதாஸ் கூறுகையில், "அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு தற்போது போராட்டக்களமாக மாறிவருகின்றது. எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்று இருக்கக்கூடாது. மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்கும் போராட்டம் தேவை” என்றார்.

மேலும் பேசிய அவர், ரஜினிகாந்த் உடன் கூட்டணி குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அவர் கட்சி தொடங்கிய பின் கூட்டணி குறுத்து யோசனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது ஆபத்தானது" - பாமக ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details