தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த வியாபாரி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல் - salem idayapatti

காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட முருகேசன் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ramadoss-tweet-on-salem-idayapatti-men-died
காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

By

Published : Jun 23, 2021, 7:37 PM IST

சேலம்:இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வணிகர் முருகேசன் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் காவலர்களால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை அனுமதிக்கக்கூடாது. வணிகர் முருகேசன் தாக்கப்படும் காட்சிகள் மனதை பதற வைக்கின்றன. தம்மை தாக்க வேண்டாம் என்று முருகேசன் கதறும் போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி நடுசாலையில் வைத்து தாக்குவது மிருகத்தனமானதாகும். அதை மன்னிக்க முடியாது.

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலை நிகழ்ந்த ஓராண்டுக்குப் பிறகு அதே நாளில் வணிகர் முருகேசன் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமதாஸ் ட்வீட்

காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட வணிகர் முருகேசன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸ் ட்வீட்

இதையும் படிங்க:போலீஸ் தாக்குதலில் வியாபாரி உயிரிழப்பு - சிறப்பு எஸ்ஐ கைது

ABOUT THE AUTHOR

...view details