சென்னை அடையாறில் உள்ள ராஜரத்தினம் கலையரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமதாஸ்க்கு முத்து விழா கொண்டாடப்பட்டது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஏ.கே மூர்த்தி, நிறுவனர் ராமதாஸ், ஜிகே மணி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
ஏழை மாணவர்களுக்காக கவலைப்பட்ட ராமதாஸ் - அடையாறு
சென்னை: "நீட் தேர்வினால் மிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்த மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் போகிறது" என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
ramadoss
பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறுகையில், "வட மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி பயில்வதற்காக இங்கு நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்த மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் போகிறது" என்றார்.