சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் நேற்று(அக்.17) கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கே ரோந்துப் படகில் வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கரை திரும்ப உத்தரவிட்டுள்ளனர். இல்லையெனில் சுட்டுவிடுவதாகவும் எச்சரித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த ராமேஸ்வர மீனவர்கள் இன்று(அக்.18) காலையில் கரை திரும்பியுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், 'வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.