இது குறித்து அவர் ட்விட்டரில், "மது அருந்துவதால் கொரோனா வைரஸ் குறையும் என்பது அபத்தம் என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் மருத்துவம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பாமல், அதனைப் பரப்பாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
'மது அருந்துவதால் கொரோனா வைரஸ் குறையும் என்பது அபத்தம்!'
சென்னை: மது அருந்துவதால் கொரோனா வைரஸ் குறையும் என சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் அபத்தமானது என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ramadas-tweeted-
மேலும் அவர், கேரளாவில் பரவிவரும் பறவைக்காய்ச்சல் குறித்து...
- கேரளத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பறவைக் காய்ச்சலும் பரவிவருவதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
- கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். பறவைக் காய்ச்சலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஊடகங்கள் வழியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'கொரோனா தொற்று அதிகரிப்பதால் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது'