இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை தலைவர் ஜெயந்தி அறிவிப்பில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் போதிய அளவு மூன்று அடுக்கு முகக்கவசம், N95 முகக்கவசம், சானிடைசர் ஆகியவை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
'போதுமான மருத்துவ உபகரணங்கள் உள்ளன' - ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவ உபகரணங்கள் உள்ளதாக மருத்துவமனை தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
rajiv-gandhi-government-hospital
மேலும் அவர், தற்போது கரோனா தொற்றுக்கான ஆயிரத்து 514 முழு உடல் கவசம், 2 ஆயிரத்து 570 N95 முகக்கவசம், 28 ஆயிரத்து 870 மூன்று அடுக்கு முகக்கவசம், 86 ஆயிரத்து 600 கையுறைகள், 1 லட்சத்து 50 ஆயிரம் ஒருமுறை பயன்படுத்தும் கையுறை ஆகியவை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார், மருத்துவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் உத்தரவு