கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலில் அந்நோயை எதிர்க்கும் சக்தி அதிகமாக இருக்கும். அவர்களது நோய் எதிர்ப்பு அணுக்களை (பிளாஸ்மா) அடையாளம் கண்டு, அவற்றைப் பிரித்தெடுத்து, தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கொடுத்து பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சிகிச்சை முறை, மெர்ஸ், சார்ஸ் போன்ற வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நல்ல பலனை அளித்துள்ளது. கரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கான முதற்கட்ட ஆராய்ச்சி இந்தியாவில் தொடங்கியுள்ளது.
இதனை மேற்கொள்ள தமிழ்நாட்டில், சென்னை ராஜிவ்காந்தி, மதுரை, திருநெல்வேலி, வேலுார் சி.எம்.சி., ஆகிய மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இதற்கான முதற்கட்ட ஆராய்ச்சியை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை தொடங்கியுள்ளது.
chennai rajiv gandhi hospital இதுகுறித்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி தலைவர் சுபாஷிடம் கேட்டபொழுது, "கரோனாவிற்கான பிளாஸ்மா சிகிச்சை குறித்த ஆராய்ச்சிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது. அதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சியின் வாயிலாக, கரோனாவிற்கான சாதக பாதகங்கள் குறித்து தெரியவரும். அதுகுறித்து, மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பப்படும். நாடு முழுவதும் பல மருத்துவமனைகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இந்த ஆராய்ச்சியில் நல்ல தீர்வு கிடைக்கும் பட்சத்தில், பிளாஸ்மா சிகிச்சைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும். இந்த ஆராய்ச்சியின்படி, சிகிச்சை செயல்பாட்டிற்கு வர, ஆறு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகும். இதற்காக ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒருவரிடமிருந்து பிளாஸ்மா தானமாக பெறப்பட்டு உள்ளது" என்றார்.
இதையும் படிங்க : சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 2-3 நாட்களில் உதவித் தொகை - நிதின் கட்கரி