நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தனிக் கட்சியுடன் களமிறங்குவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் 12ஆம் தேதி செய்தியாளர்கள் முன் அவர் உரையாற்றினார்.
அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி ட்வீட் - அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி ட்வீட்
சென்னை: அரசியல் பிரவேசம் குறித்த தனது பேச்சினை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிய அனைவருக்கும் நன்றி என்று ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
அப்போது, அரசியல் மாற்றம் குறித்த தனது கருத்துகளையும், தான் வகுத்து வைத்துள்ள சில திட்டங்களையும் விளக்கிப் பேசினார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.