தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியன் 2 க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு! இன்று மாலை வெளியிடுகிறார் ரஜினிகாந்த்! - Indian 2 Glimpse

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நடிகர் ரஜினிகாந்த இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட உள்ளார்.

rajinikanth-to-release-kamal-haasans-indian-2-glimpse-video
கமல்ஹாசனின் இந்தியன் 2 க்ளிம்ஸ் வீடியோ வெளியிடும் ரஜினிகாந்த்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 1:26 PM IST

சென்னை:இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோவை தமிழில் நடிகர் ராஜினிகாந்தும், தெலுங்கில் இயக்குநர் ராஜமெளலி, மற்றும் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் ஆகியோர் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன், இரண்டு வேடங்களில் நடித்து 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான இப்படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமனி, செந்தில், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர்.

ஊழல், லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட கருத்துகளை மையமாக வைத்து எடுக்கபட்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் பரிந்துரைக்கு இந்தியாவின் சார்பில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இதனையடுத்து 27 ஆண்டுகளுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட்டை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை (நவ. 3) மாலை 5.30 மணிக்கு படத்தின் முன்னேட்ட வீடியோ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த மற்றும் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் வெளியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அ

அதேபோல், தெலுங்கில் ராஜமௌலியும், கன்னடத்தில் கிச்சா சுதீப், இந்தியில் ஆமீர்கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தியன் 2 க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பார்ப்புகளை கிளப்பி உள்ளது. குறிப்பாக இதனை தமிழில் ரஜினிகாந்த் வெளியிடுவது கமல் - ரஜினியின் நட்பை பறைசாற்றும் விதமாக உள்ளது என ரசிகர்கள் இந்த அப்டேட்டை கொண்டாடி வருகின்றனர். மேலும் இத்திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:தளபதி 68 படப்பிடிப்புக்காக தாய்லாந்திற்கு சென்ற நடிகர் விஜய்! வீடியோ வைரல்!

ABOUT THE AUTHOR

...view details