பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் மீண்டும் உடல் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டி, திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், தங்களது பிரார்த்தனைகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
'கூட்டுப் பிரார்த்தனையால் எஸ்.பி.பியை மீட்டெடுப்போம்' - நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் - நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை
சென்னை : பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
’கூட்டு பிரார்த்தனையால் எஸ்பிபியை மீட்டெடுப்போம்’- நடிகர் ரஜினிகாந்த்
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக இன்று (ஆக.20) மாலை 6 முதல் 6.05 வரை நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொண்டு, நமது பிரார்த்தனையால் எஸ்.பி.பியை மீட்டெடுப்போம்' என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:எஸ்.பி.பிக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் : பாரதிராஜாவைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் வேண்டுகோள்