சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "தமிழ்நாடு மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் கமலுடன் சேர்ந்து பயணிப்பேன். தமிழ்நாட்டின் நலனுக்காக இருவரும் இணைய வேண்டிய நிலை வந்தால் இணைவோம். எனக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.
மக்களின் நலனுக்காக கமலுடன் இணைவேன் - ரஜினிகாந்த் - கமலுடன் இணைந்து பயணிப்பேன்
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் இணைந்து பயணிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
kamal -rajini
இதற்கு முன்பாக கமல்ஹாசனும், தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்காக நானும், ரஜினியும் சேர்ந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டால் இணைவோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.