தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினி மகளின் திருமண வரவேற்பு விழாவில் என்ன செய்தார்கள் தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

ரஜினி

By

Published : Feb 8, 2019, 11:59 PM IST

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 11-ம் தேதி மறுமணம் நடைபெறுகிறது. இந்நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இவர்களது திருமண வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய திருமண வரவேற்பு விழாவில் ரஜினியும் , லதாவும் சேர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மணமக்களை அறிமுகப்படுத்தினர்.

ரஜினி

இவ்விழாவிற்கு நெருக்கமான சொந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, பத்திரிகை அழைப்பு இல்லாமல் அரசியல் தலைவர் ஜிகே வாசன், நடிகர் பொன்வண்ணன் சரண்யா, பொன்வண்ணன் உள்ளிட்ட பிரபலங்களும் வந்து கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட

ரஜினி
பிரபலங்களுக்கு விதைகள் அடங்கிய பை ஒன்று வழங்கப்பட்டது. சௌந்தர்யா ரஜினிகாந்த் -,விசாகன் வணங்காமுடி திருமண வரவேற்பு விழா முடிந்த நிலையில், திருமணம் வருகின்ற பதினொன்றாம் தேதி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டலில் நடக்க இருக்கிறது.

திருமண விழாவில் ஏராளமான திரைத்துறை சார்ந்த பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details