சென்னை:ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள திரைப்படத்திற்கான பூஜை இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மூன்றாவது வாரம் முதல் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, அடுத்ததாக தனது மகள் இயக்கி வரும் “லால் சலாம்” படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதுவரை இப்படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்க உள்ளார். இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும், இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், தெலுங்கு நடிகர் சர்வானந்த் ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:"வேட்டையன் ரோல் பண்ணும் போது பயந்து கொண்டே நடித்தேன்" - ராகவா லாரன்ஸ்!
அதனைத்தொடர்ந்து, படத்தில் ரஜினியின் தோற்றம் வித்தியாசமாக இருக்கும் என்றும் மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று படத்தின் பூஜை சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. இதில் ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால், படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக சென்னையில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் உள்ள ரஜினிகாந்த், இயக்குனர் ஞானவேல் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. படத்தின் கதையை கேட்ட பகத் பாசில் உடனே நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தில் இவர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி படத்தின் அப்டேட் வெளியாகி வருவது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்து உள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் 20 அடியில் பூரி ஜெகந்நாதர் சிலை திறப்பு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு!