தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதியில் கிட்டத்தட்ட திமுக கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றி வெற்றியை உறுதிசெய்துள்ளது. மேலும், சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
'மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலினுக்கு வாழ்த்து' - ரஜினி! - wishes
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில், அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினி
இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் " என்று பதிவிட்டுள்ளார்.