திருச்சி மக்களைவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில், “அனைத்து மக்களும் உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பை ஏற்க வேண்டும். ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் எந்த தலைமையின் கீழும் செயல்பட மாட்டார் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். தெய்வபக்தி உள்ளது என்பதற்காக அவர் மீது காவி சாயம் பூசக்கூடாது” என கூறினார்.