தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஷெரின் நடித்த ரஜினி படம் நிறைவு - sherin new movie update

'ரஜினி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது, விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. ரஜினி பட படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளார்கள்.

ஷெரின் நடித்த ரஜினி படம் நிறைவு
ஷெரின் நடித்த ரஜினி படம் நிறைவு

By

Published : Sep 30, 2021, 4:39 PM IST

சென்னை: வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி. பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது 'ரஜினி' திரைப்படம். இப்படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்குகிறார். இதில் விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடிக்கிறார்.

ரஜினி படப்பிடிப்பு நிறைவு!

மேலும் வனிதா, மூக்குத்தி முருகன், குக் வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்க, பாடல்களை பா. விஜய் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இப்படம் பற்றி இயக்குநர் ஏ. வெங்கடேஷ் கூறுகையில், "படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. தற்போது டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன. இரண்டு மாதங்களாக ஃபிரீ புரொடக்ஷன் பணியைச் சிறப்பாகச் செய்ததால், இத்தனை நடிகர்களை வைத்து ஒரேகட்டமாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்தேன்.

திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கியுள்ளேன். ரஜினி ரசிகரான விஜய் சத்யா (ரஜினி) தனது வாழ்வில் எதிர்பாராத விஷயமாக ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார். அது என்ன மாதிரியான சிக்கல்கள்; அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

விஜய் சத்யா

அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடித்துள்ளது. நான் இயக்கிய படங்களிலேயே, இந்தப் படத்தில்தான் ஒரு மிருகத்தை நடிக்கவைத்திருக்கிறேன். அந்த நாய் வரும் காட்சிகள் அனைத்தும் அவ்வளவு சிறப்பாக இருக்கும், அப்படி ஒரு ஆர்ட்டிஸ்டை போல நடித்துள்ளது. படப்பிடிப்பு முடியும்போது நானும் அந்த நாயும் நாண்பர்களாகிவிட்டோம்.

இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் சத்யாவுக்குப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படிச் சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர் வி. பழனிவேல் திட்டமிட்டுள்ளார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:திரையரங்குகளில் மாஸ் காட்டும் 'நோ டைம் டூ டை'

ABOUT THE AUTHOR

...view details