தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினி மகள் திருமணம் -எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து - video

சென்னை: இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ரஜினி மகள்

By

Published : Feb 11, 2019, 10:34 AM IST

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கு தொழிலதிபர் விசாகனுடன் மறுமணம் இன்று லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடக்கிறது. கோலாகலமாக நடக்கும் இந்த திருமணத்தில் முக்கியமான அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமண விழாவிற்கு இன்று காலை முதலமைச்சர் பழனிசாமி வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

ரஜினி மகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல், பல்வேறு அரசியல் தலைவர்களும் வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்திற்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது இரண்டாவது மகளுக்கு மறுமணம் நடக்கின்ற மகிழ்ச்சியில் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதாவும் "ஒருவன் ஒருவன் முதலாளி" பாட்டிற்கு குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details