தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘யாருக்கும் ஆதரவு கிடையாது’ - உள்ளாட்சி தேர்தல் குறித்து ரஜினி அறிக்கை! - local body election

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கும் கிடையாது என ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Local Body elections
ரஜினி

By

Published : Dec 8, 2019, 1:24 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு என்ற விவாதமும் பரவலாக இருந்துவந்தது. தற்போது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிக்கை

அதில், ‘தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கோடியோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ உபயோகித்து வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜிஎஸ்டி வரிகளை உயர்த்த மத்திய அரசு திட்டம்’ - ப.சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details