அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி என்ற அறிவிப்பு வெளியானதும் பாமக.வின் மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்த ராஜேஸ்வரி ப்ரியா, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
பாமகவில் இருந்து விலகிய ராஜேஸ்வரிப்ரியா சுயேட்சையாக போட்டி - Rajeshwari
சென்னை: பாமகவில் இருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா தென்சென்னை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
ராஜேஸ்வரிப்ரியா
இதை தொடர்ந்து பாமகவிற்கு எதிராக பல கருத்துகளை பதிவு செய்த வண்ணம் இருந்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவதாக செய்திகள் வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கினார். இன்று தென்சென்னை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.