தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 20, 2020, 9:25 PM IST

ETV Bharat / state

சென்னை- டெல்லி சிறப்பு ரயில் சேவை மாற்றம்

சென்னை: டெல்லியில் இருந்து சென்னை சென்று வரும் ராஜ்தானி சிறப்பு ரயிலின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

Rajdhani express
Rajdhani express

கரோனா ஊரடங்குக்கு மத்தியில் ரயில்வே துறை சார்பாக தலைநகர் டெல்லியில் இருந்து நாட்டின் முக்கியப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் இருந்து சென்னை சென்று வரும் ராஜ்தானி சிறப்பு ரயிலின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. நாளை முதல் புதிய நேரங்களில், இந்த ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டெல்லியில் இருந்து சென்னை வரும் ராஜ்தானி ரயில் (வண்டி எண் 02434) திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 4 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் தர ஏசி பெட்டியும், 5 இரண்டாம் தர ஏசி பெட்டியும், 11 மூன்றாவது கட்ட ஏசி பெட்டியும் கொண்ட இந்த ரயில், ஆக்ரா, ஜான்சி, போபால், நாக்பூர், வாராங்கல், விஜயவாடா ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தங்களுடன் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.40 மணிக்குச் சென்னை வந்தடையும்.

அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு, ராஜ்தானி ரயில் (வண்டி எண் 02433) வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லி சென்றடைகிறது. இதற்கான முன் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: லாக்டவுன் 4.0: கட்டுப்பாடுகளை நாங்கள் கூர்ந்து கவனிக்கிறோம் - உள்துறை அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details